"நான் ஓடி ஒளியவில்லை, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்" - நடிகர் மோகன்லால்..!
தான் எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாகவும் அண்மையில் கலைக்கப்பட்ட மலையாள நடிகர் சங்க தலைவர் மோகன் லால் கூறியுள்ளார்.
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போதைய பாலியல் புகார்களை முன்வைத்து ஒட்டு மொத்த மலையாள திரையுலகையே குற்றஞ்சாட்டக்கூடாது என்றார். ஹேமா கமிட்டி அறிக்கையை தாம் வரவேற்பதாகவும், தவறு செய்தவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறிய அவர்,மலையாளத்தில் 21 சங்கங்கள் உள்ள நிலையில், எல்லாவற்றுக்கும் நடிகர் சங்கத்தை மட்டும் குறை கூறுவது சரியல்ல என்றும் தெரிவித்தார்.
Comments